search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலேர் மெகந்தி"

    திரையிசைக்கு நிகராக தனது பங்ரா மற்றும் பாப் இசை பாடல்களின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்த பாடகர் தலேர் மெகந்தி இன்று பாஜகவில் இணைந்தார். #DalerMehndi #DalerMehndiBJP
    டெல்லி:

    பிரபல இசைக்கலைஞர், பாடலாசிரியர், எழுத்தாளருமான தலேர் மெகந்தி  உலகெங்கும் பங்கரா பாடல்களை பரப்பியதற்காக பரவலாக அறியப்படுகின்றார்.

    தனித்துவமான குரலுடன் ஆற்றல்மிகு நடனப் பாடல்களால் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கும் இந்தியப் பரப்பிசைக் கலைஞராகவும் அறியப்படும் தலைப்பாகையும் நீண்ட தவழும் உடைகளும் தனி அடையாளங்களாக உள்ளன. இவரது பல பாடல்கள் மொழி எல்லைகளை எல்லாம் கடந்து அனைவரையும் தாளம்போட்டு, ஆடவும் வைக்கும் ஆற்றல் படைத்தவை.

    இந்நிலையில், சமீபகாலமாக அரசியல் கட்சிகளில் இணையும் பல்துறை பிரபலங்களின் வரிசையில் தலேர் மெகந்தி மத்திய மந்திரி விஜய் கோயல் முன்னிலையில் இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.  #DalerMehndi #DalerMehndiBJP 
    ×